சமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர்
சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப நாள், சிங்கப்பூர் திருச்சி சமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை பங்குனி 03, 2050 / 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்குக் கடற்கரைப் பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், பல இன மக்களும் கலந்துகொண்ட குடும்ப நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு இறை மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் இந்திய முசுலிம் பேரவையின்…
சிங்கப்பூரில் ‘மானுடம் போற்றும் மாணவர்கள்’ நிகழ்ச்சி
சிங்கப்பூரில் சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய ‘மானுடம் போற்றும் மாணவர்கள்’ நிகழ்ச்சி வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, திருச்சி சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ஞாயிற்றுக்கிழமை சித்திரை 03, 2048 / 16-04-2017 அன்று, சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில், “மானுடம் போற்றும் மாணவர்கள்” என்ற இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது. சிங்கப்பூரில் தமிழ் மொழியை அடுத்த…