இனிய நந்தவனம் – மலேசியா சிறப்பிதழ்: அறிவிப்பு
சந்திரசேகர்<nandavanam10@gmail.com> முதுவை இதயத்து (MUDUVAI HIDAYATH) துபாய் 00971 50 51 96 433
உலகளாவிய இரு போட்டிகளுக்கு ஒவ்வோர் இலட்சம் உரூபாய்ப் பரிசு
ஒவ்வோர் இலட்சம் உரூபாய் இரு போட்டிகளுக்குப் பரிசு புதினம் 20 ஆவது ஆண்டில் நடத்தும் சிறுகதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை மக்களிள் வாழ்வியல் பற்றிய உலகச் சிறுகதைப்போட்டி – பரிசுத்தொகை உரூபா நூறாயிரம் அமரர் சின்னத்தங்கம் இரத்தினம் நினைவாக, நெஞ்சைத்தொட்ட தாயின் நிலைையை எழுதுவோருக்கும் மொத்தப் பரிசு உரூபா நூறாயிரம். இரு போட்டிகளும் உலகளாவியது. படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், புதினம், 38, மொபட்டு சாலை, இலண்டன் [ Editor, PUTHINAM 38, Moffat Road, London, SW 17 7EZ UK…
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! – குறள்நதி
உலகாள்வோம் உயிர்த் தமிழால்! பாரெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் -அன்று சங்கம்பல கண்டிட்ட மதுரத்தமிழ் அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் -என்றும் அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே ! காவியம்பல தந்திட்ட முத்தமிழ் -நமக்குள் கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ் கவிபாட இனித்திட்ட தேன்தமிழ் -நம்மையெல்லாம் கவிஞனாய் இங்குப் பாடவைத்த அருந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே ! தமிழ்த்தாயைத் தாலாட்டும் பத்துப்பாட்டு-எங்கும் தமிழ்மொழியை வளர்க்கின்ற எட்டுத்தொகை…
அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)
அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்) துபாயில் செயல்பட்டு வரும் தூதஞ்சல் நிறுவனமான எம்ஃச்டார் (EMSTAR COURIER & CARGO LLC) அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் தூது அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது. சரக்கு(கார்கோ)க்கு அயிரைக்கல்(கிலோ) ஒன்றுக்கு 10 திர்ஃகாம் கட்டணமாகப் பெறப்படுகிறது. பொதிவுச்சிப்பம் (packing).வான்வழிக் கட்டணம் தனி. அமீரகம், வளைகுடா, இந்தியா முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தூதஞ்சல் பணி இருந்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள எம்ஃச்டார் தூதஞ்சல் பணியூழியத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய…
சார்சா இரோலா பகுதியில் முதல் வாரந்தோறும் பல்மருத்துவ முகாம்
சார்சா இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்வகை மருத்துவமனையில் பல் மருத்துவ இலவச முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 06 – 5685 022 , 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைவரும் பயன்பெறும் வகையில்…
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29 ஆம் நாள் தொடங்கி பிப்பிரவாி 7 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…
சார்சாவில் பல் மருத்துவ இலவச முகாம்
சார்சா (உ)ரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறை மருத்துவக்கூடத்தில் இலவச பல் மருத்துவ முகாம் சனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான மருத்துவம் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – முதுவை இதாயத்து
கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’
கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசுக்குப் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது. மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 இல் புதுச்சேரியில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார். புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி…
நெடுந்துயர் அகன்றேயோடும் ! – எம்.செயராமன்
வான்முகில் வளாது பெய்கவென வாயார வாழ்த்துப் பாடி வையத்தில் விழாக்கள் தோறும் மனமாரப் பாடி நிற்போம் வாழ்த்தினைக் கேட்டு விட்டு வானுறை தேவர் எல்லாம் வையகம் வாழ்க எண்ணி மாமழை பொழியச் செய்வர் வறண்டு நிற்கும் பூமியெல்லாம் வான் மழையைக் கண்டுவிட்டால் மகிழ்வு கொண்டு வானோக்கி மனதார நன்றி சொல்லும் வயல்நிறையும் குளம் நிறையும் வயலுழுவார் மனம் மகிழும் தினமும் மழை பெய்கவென தீர்மானம் எடுத்தும் நிற்பார் அகமகிழ வைக்கும் மழை ஆபத்தைத் தந்த திப்போ அனைவருமே மழை பார்த்து அலமந்தே நின்று விட்டார்…
அவதானப் புலவர் அபூபக்கர் – பேராசிரியர் மு. அப்துல் சமது
தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’ “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ் ஆயென்ற போதாத னேர்விடை கூறவும், ஆசினிக்கு ஈயென்ற சொல்லை யிணைக்கலம் இட்டிசை யின்னவையோ டேயென்ற ஆறும் அவதானம் செய்பவர் மகியைந்தவையே” என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவதானக் கலையை நிகழ்த்துபவர்கள் பெற்றிருக்கும் திறனை அளவிட்டுள்ளார். ஒரே நேரத்தில் பல்வேறு நுட்பமான செய்திகளைக் கவனத்தில் நிறுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு விடைகூறும் விதத்தில் இக்கலை…
துணிவு இழந்தவனுக்குச் சுண்டுவிரல்கூட எதிரிதான்
துணிவு துணிந்தவனுக்குக் கடலின் ஆழம்கூட ஒரு சாண் வயிறு துணிவு இழந்தவனுக்கு மண்பானையின் ஆழம்கூட கடலின் ஆழம் என்பான்… துணிந்தவனுக்கு தலையெழுத்து ஒரு தடையில்லை.. துணிவு இழந்தவனுக்கு அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான் துணிந்தவனுக்கு ஒரு முறை மரணம்.. துணிவு இழந்தவனுக்கு நித்தம் நித்தம் மரணம்.. தவற்றைக் களையெடு சேமிப்பை விதைபோடு நீயும் துணிந்தவன்தான் வாழ்க்கையென்னும் பக்கத்தில் துணிந்தவன் வீழ்ந்தாலும் எழுவான்.. துணிவு இழந்தவன் எழுந்து எழுந்து வீழ்ந்துகிடப்பான்.. அகக்கண் திறங்கள் துணிவு பிறக்கும் புறக்கண் துறந்துவிடுங்கள்.. ஆக்கம் பிறக்கும்.. ஏன் என்ற கேள்வி பிறக்காவிடில் பிறக்காமலேயே இறந்துவிடுகிறது…
கடவுள் மொழிபேசும் கடவுள் – இரா. சத்திக்கண்ணன்
கடவுள் மொழிபேசும் கடவுள் என் கவனம் விழ கிட்டே தத்தித்தத்தி ஓடிவந்து கடவுள் மொழியில் பேசுகிறது வா வாவென கைகள் நீட்டுகையில் வெட்கப்பட்டு கண்களையும் கன்னங்களையும் மூடிக்கொள்கிறது அவ்வப்போது முன்தலையையும் மறைத்துக்கொள்கிறது சற்று கை நகர்த்தி இருக்கேனா ? என்று அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறது நான் பார்க்காததுபோல் நடிக்கும்போது உற்றுப்பார்க்கிறது துளிசத்தம் எழாமல் கைகொட்டுகிறது நான் சட்டென்று பார்க்கையில் அம்மாவின் பின்னால் ஓடி ஒளிந்துகொள்கிறது நான் நகரும்போது கண்ணில் ஏக்கம் தெறிக்க வழியனுப்புகிறது கையசைத்து! கடவுள் மொழிபேசிய கடவுள்!! – இரா. சத்திக்கண்ணன் தரவு: முதுவை…
