பாலுமகேந்திரா விருது 2016 – (குறும்படங்களுக்கு மட்டும்) நண்பர்களே இயக்குநர் பாலுமகேந்திரா  நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது  நினைவுநாளான மே 19 அன்று, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்கத் தமிழ்ப்படநிலையம்(ஃச்டுடியோ) ஏற்பாடு செய்திருக்கிறது. விருதுத் தொகை: உரூபாய் 25000/-   தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும்,  பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.   கலந்துகொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும்….