தமிழகப்புலவர் குழுவின் முப்பெரு விழா

தமிழகப்புலவர் குழுவின் 109 ஆம் கூட்டம் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா முத்தமிழ்க்காவலரின் 119ஆம்  ஆண்டுவிழா தை 15, 2048 சனிக்கிழமை சனவரி 28, 2017 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை பாரத்து பல்கலைக்கழகம், பாலாசி மருத்துவமனை வளாகம், குரோம்பேட்டை, சென்னை கருத்தரங்கம் : செம்மொழி வளர்த்த செம்மல்கள்

சிறந்தது தாய்ச்செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்

  சிறந்தது தாய்ச்செல்வம்   செல்வம் பலவகைப்படும். “பதினாறும்’பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று வாழ்த்துவதில் ‘பதினாறு பிள்ளைகள்’ என்று பொருளல்ல. அது மனை, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் என்பனவையாகும்.  இந்தப் பதினாறிலும் சிறந்தது தாய்ச்செல்வம். பிற செல்வங்களை இழந்து விடுவோமானால் முயன்றால் அவற்றைத் திரும்பப் பெற்று விடலாம். தாய்ச் செல்வத்தை இழந்து விட்டால் அதனை எவராலும் எவ்விதத்திலும் பெற முடியாது.  – முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்: ஐந்து செல்வங்கள்