இலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்
இலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர். இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…