மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்தவர்களை மாணவி காயத்திரி வரவேற்றார்.பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய அறிவியல் நாள் தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் விளக்கமாக பேசினார். ஆசிரியை செல்வமீனாள் அறிவியல் ஆய்வுகளை எளிய முறையில் மாணவர்களுக்குச் செய்து காண்பித்துச் செயல் விளக்கம் அளித்தார். விழாவில் 6ஆம் வகுப்பு மாணவி காவியா, சென்னை அக்கினி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல்…
ஓய்வறியாக் கல்விப் பணியாற்றும் ஆசிரியை முத்து மீனாள்
ஓய்வறியா கல்விப் பணியாற்றும் ஆசிரியை முத்து மீனாள் தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஓய்வறியாக் கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2015 ஆண்டு முழுவதும் தற்செயல் விடுப்பு உட்பட எந்த விடுப்பும் எடுக்காமல் ஒப்படைப்பு உணர்வுடன் பணியாற்றிய இடை நிலை ஆசிரியர்…