மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.
மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (சித்திரை 09, 2047 / ஏப்.22) காலை இயற்கை எய்தினார். இவர் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள் ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்கக் காலம்’ என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தமிழ்த்தொண்டாற்றினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் இலக்குவனார்…