வண்ணப்பாடல் வகையிலான திருப்புகழ் போல் இசைநூல் வேறு மொழிகளில் இல்லை. – இரா.திருமுருகன்
வண்ணப்பாடல் வகையிலான திருப்புகழ் போல் இசைநூல் வேறு மொழிகளில் இல்லை! அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போன்றதொரு இசைநூல் உலகில் வேறு மொழிகளில் இருப்பதாகத் தெரியவில்லை. சமற்கிருதம், தெலுங்கு, மலையாள மொழிகளில் இத்தகையநூல் இல்லை. அவ்வளவு அருமையான இந்நூலின் பெருமையை அதைப் பெற்ற தமிழர்களே அறிந்து கொள்ளவில்லை என்பது வருந்தக்கச் செய்தி. அருணகிரிநாதரே தம் திருப்புகழை, “நான் உனை நிகர் சந்தத்தமிழ் சொரிந்து பாடவும்” என்று சந்தத்தமிழ் என்று குறிப்பிடுகின்றார். என்றாலும் சந்தப் பாடல்களுக்கும் திருப்புகழ்ப் பாடல்களுக்கும் இடையே உள்ள நுட்பமான அமைப்பு வேறுபாடு…
இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே! – இரா.திருமுருகன்
இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே! பாட்டியல்கள் சிற்றிலக்கியங்களின் தொகை தொண்ணூற்றாறு என்று கூறினாலும் தமிழில் 360 வகைச் சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, தூது, பரணி, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, அந்தாதி, புராணம் ஆகியவை பெருவழக்கில் உள்ளன. … …. …. இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சிற்றிலக்கியங்கள் தரும் இசைச் செய்திகள், சிற்றிலக்கியங்களில் காணப்படும் இசைப்பாடல்கள், இசைப்பாடல்களாகவே அமைந்த சிற்றிலக்கியங்கள் என்ற மூன்று வகையில் அடங்கும். -முனைவர் இரா.திருமுருகன்:…
சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் – இரா.திருமுருகன்
சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் சங்கக் காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் இசைத்தமிழுக்கு நிரம்ப இடமளித்துள்ளது. அஃது ஒரு முத்தமிழ்க் காப்பியம். அதில் உள்ள 30 காதைகளில் 10 காதைகள் இசைப்பாடல்களாகவும் இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. மங்கல வாழ்த்துப் பாடல், கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன இசைப்பாக்களாகவும், அரங்கேற்றுக் காதை, வேனிற்காதை, புறஞ்சேரியிறுத்த காதை ஆகியன இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. வரி என்பது இசைப்பாடல்களின் பெயர், முகமுடைவரி, முகமில்வரி, சார்த்துவரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, கானல்வரி, ஆற்றுவரி, சாயல்வரி, உள்வரி,…