தமிழை நினைந்து தம்மை மறந்தவர்   இலக்குவனார் செய்த தமிழ்ப்பணி, தனியொருவர் செய்திட முடியாத செயற்கரிய பெரும் பணி; எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க பேராசிரியராய்த், துறைத்தலைவராய், கல்லூரி முதல்வராய், நூலாசிரியராய், இதழாசிரியராய், இலக்கண இலக்கிய ஆய்வாளராய், மொழி பெயர்ப்பாளராய், மேடைப் பேச்சாளராய் சிறந்த கவிஞராய் மொழிப் போர்த் தளபதியாய் விளங்கியவர் இலக்குவனார். இவரால் தமிழுணர்வு ஊட்டப் பெற்று இவரிடம் பயின்றவர்களும், அமைச்சர்களாய், கட்சித் தலைவர்களாய், இவரைப் போன்றே மொழி ஆற்றல் பலவுடையராய்ச், சிறப்புற்றிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இவர் தமிழுக்காக வாழ்ந்தவர், தனக்கென வாழ்ந்திலர்….