செம்மொழி நிறுவன இயக்குநர் அ.பழனிவேலிற்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழி நிறுவன இயக்குநர் அ.பழனிவேலிற்குப் பாராட்டும் வேண்டுகோளும்! செம்மொழித்தமிழாய்வு மத்தியநிறுவனம் முழுப்பொறுப்பிலான இயக்குநர் இன்றியே செயல்படுகிறது. தமிழாய்ந்த தமிழறிஞரை இயக்குநராக அமர்த்தாமையால் மத்திய அரசு அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பில் இயங்கிக் கொண்டுள்ளது. (செயல்படும் தலைவர் இல்லாதபொழுது நிறுவனத்தின் நிலை இவ்வாறுதான் இருக்கும்.) அவ்வாறு கூடுதல் பொறுப்பில் வருபவர்கள் தமிழார்வலர்களாக இருக்க வேண்டும் என்றில்லை. எனினும் இப்போது திருச்சிராப்பள்ளித் தேசியத்தொழில் நுட்பக்கழகத்தின் பதிவாளர் திரு.அ.பழனிவேல், இயக்குநர் (கூடுதல் பொறுப்பாக) அமர்த்தப்பட்டுச் செயல்பட்டுவருகிறார். பணிப்பொறுப்பேற்றதும் இயக்குநர் (கூ.பொ.), நிறுவனத்திற்குச் செய்யவேண்டுவன, தமிழுக்குச் செய்ய…
இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம்,சென்னை
மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 : காலை 10.00 இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) சென்னை 600 004 தமிழ்த்துறை தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர் இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி