ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா
எழுத்தாளர் கவிஞர் ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நால்வருக்கு விருது வழங்கும் விழாவுமான முப்பெரும் விழாவில் ஆதிரை முல்லையின் “உச்சிதனை முகர்ந்தால்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. திரைப்பட நடிகர் இராசேசு தலைமை வகித்தார். கலைமாமணி பிறைசூடன் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இலக்கிய வள்ளல் மாம்பலம் பாரி சந்திரசேகர் நூல்களைப் பெற்றுக்கொண்டார். கவியரசரின் திருக்குமரன் அண்ணாமலை கண்ணதாசன் நிகழ்வில் முன்னிலை வகித்தார். [படங்களை அழுத்தின் பெரியஅளவில் காணலாம்.]
வளரி – சூல் வாசிப்புத்தளம் வழங்கும் கவிப்பேராசான் மீரா விருது
பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2016 காலை 10.00 மதுரை வழங்குநர் : பேரா.கவிஞர் ஆதிராமுல்லை மீரா படத்திறப்பு : பேரா.தி.சு.நடராசன் அன்புடையீர், வணக்கம். கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு தங்கள் வருகையால் சிறக்கட்டும். கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன் ஆசிரியர் – வளரி
புருவங்களை முறுக்கு! – மும்பையில் ஆதிரை முழக்கம்
தமிழ்வாழ்த்து எல்லையை இழந்தாய் வாழ்ந்த இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று முல்லையும் இழந்தாய் எங்கள் முத்தமிழ்த் தாயே என்றும் தொல்லையில் கிடந்தும் வீரத் தோள்தனைத் தூக்கி நின்றாய் இல்லையே சங்கக் காலம் ஏங்கினேன் தமிழே வணக்கம். அவை வணக்கம் கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை பொன்னகராம் புதுநகராம் வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம் மின்னரகராம் தொழில்கள் கலைகள்…
எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை
முனகல்களோடு புலர்ந்து கொண்டிருந்த பொழுதை மூர்ச்சையாக்கி புதைத்த அந்த நாள் பால் குடிப்பதற்காக, சடலத்தின் உடலை உறிஞ்சிய பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள் கனவுகளைச் சுமந்த பாவாடை மலர்களின் நீலம் பாய்ந்த நயனங்கள் வெட்டிய நெஞ்சின் முட்டிய உறுதியின் அடையாளமாய் கருகிய மீசைகள் சுருங்கிய தோலும் சுருங்காத கனவும் தேக்கிய இதயங்கள் எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! மரணம் அடுக்கி மாளிகை கரசேவக இனவெறிப் பேய்கள் குருட்டு மொழியின் கதறல்களுக்கு இன்னும் வெளிச்சமிடாத பச்சைத் துரோகங்கள் மே 18 சிந்திய செந்துளிகள் அமைதியடையும்…