எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளைத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்
எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை நமக்குத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார் திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை, கி.மு. முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட முதுபெரும் படைப்பாகும். அதனில், உலக வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் உரைக்கப்பட்ட கருத்துகள் இன்றளவும் மிகச் சிறந்த வாழ்வியல் கோட்பாடுகளாக விளங்கி வருவது கண்கூடு. வள்ளுவர் தனது நூலினை அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பிரித்து மக்களுக்கு இக்காலத்திற்கும், பிற்காலத்திற்கும், ஏன், நம்பிக்கை இருக்குமெனின் மேலுலக வாழ்க்கைக்குமெனப் பல்வேறு கருத்துகளை வழிகாட்டு நெறிகளாய், வாழ்வியல் முறைகளாய் வகுத்தளித்துள்ளார். 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள்…
உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார் – பெ.(உ)லோகநாதன்
உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார். மனித வாழ்வின் நோக்கமே உயர்தல், உயர்நிலை அடைதல். இவ் இலக்குகள் தனி மனிதனுக்குப் பொருந்துவது போன்றே குழுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தனிமனித இலக்கு அடையப் பெற்றால் குழுவின் இலக்கோ நிறுவனத்தின் இலக்கோ அடைவது எளிது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் தனிமனித இலக்கினை அடைய முடியும் என்ற எண்ணமே குழு இலக்கு அல்லது நிறுவன இலக்கினை அடையப் போதிய உந்து விசையாக ஊக்கியாகச் செயல்படுகிறது. பொதுவாக, உயர்நிலை பெறும் அல்லது அடையும் வகையினை வள்ளுவர் தனது…