கதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்
கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார். செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். கவிஞர் மு.முருகேசு எழுதிய…
மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன
தமிழ் ஐக்கூ நூற்றாண்டு விழாவில் மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன! சென்னை. மார்கழி 09, திசம்.24, பனுவல் புத்தக நிலையமும், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய தமிழ் ஐக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்குக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். கவிஞர் நாகா அதியன் அனைவரையும் வரவேற்றார். சப்பானிய ஐக்கூ கவிதைகள் மாக்கவி பாரதியாரால் 1916-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது….