பொருளை உணரவும் உணர்த்தவும் பல்துறை அறிவு தேவை!  ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக் கூறுகள் வேண்டும்.  இது இன்ன காலத்துத் தோன்றிய நூல் என்ற கால அறிவும், இக்காலத்து இச்சொல்லுக்கு இப்பொருள் என்ற சொல்லறிவும், இன்ன காலத்து இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற சமுதாய அறிவும், இத்தொடர் ஓடிக்கிடக்கும் முறை இது என்ற நடையறிவும், இன்ன பிறவும் இருந்தால்தான் பொருளை முரணின்றிக் காண முடியும். முனைவர் வ.சு.ப.மாணிக்கம்: சிந்தனைக் களங்கள்: பக்கம். 213