தமிழாராய்ச்சிக்குதவும் தமிழ் முனைவர் குழுமம்
தமிழ் முனைவர் குழுமம் வணக்கம். தமிழில் உயர்கல்வியை மேம்படுத்தும் பொருட்டு ஒரு முகநூல் குழுவைத் தொடங்கியுள்ளேன். குழுவின் நோக்கம்: 1) தமிழகக் கல்லூரிகளில் உள்ள முனைவர், ஆய்வுநிறைஞர் (எம்.பில்.) பட்ட வகுப்பு மானவர்கள் ஆய்விற்கு உதவுதல் 2) பல்வேறு கல்லூரி, பல்கலைகழகப் பாடத் திட்டங்களை மேம்படுத்த நெறியுரை வழங்குதல் 3) தமிழகத்தில் ஆய்வுகள் அடிப்படையிலான உயர்கல்வி அமைய முயற்சி செய்தல் குழுவில் இணையப் பின்வரும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள்! 1) முனைவர் பட்டம் பெற்றவர்கள். 2) இயற்பியல், பொறியியல், தமிழ்,…
முனைவர் பட்டம் பெற்ற 80 அகவை இளைஞர் சித்தர் அ.பாண்டியன்
18.02.2014 அன்று நடைபெற்ற அழகப்பா கல்லூரியின் 26 ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் ஆளுநர் உரோசையா அவர்கள் தலைமையில் நீதியரசர் இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். நேர்த்தியான அரங்கில் 157 முனைவர் பட்டதாரிகளும், 112 முதன்மை விருது பெற்ற பல்வேறு புலங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் நேரில் பட்டம் பெற்றனர். இளைஞர் பட்டாளத்தையும் அவர்களுடைய பெற்றோரின் பெருமைமிகு பாச முகங்களையும் கண்டது மகிழ்ச்சிக்குரியது. முனைவர் பட்டம் பெற்றவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஒளிவீசும் கண்களும், அன்பு ததும்பும் சொற்களும்கொண்ட 80 அகவை இளைஞர் முனைவர் சித்தர் அ.பாண்டியன்….