புருவங்களை முறுக்கு! – மும்பையில் ஆதிரை முழக்கம்

தமிழ்வாழ்த்து எல்லையை இழந்தாய் வாழ்ந்த இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று முல்லையும் இழந்தாய் எங்கள் முத்தமிழ்த் தாயே என்றும் தொல்லையில் கிடந்தும் வீரத் தோள்தனைத் தூக்கி நின்றாய் இல்லையே சங்கக் காலம் ஏங்கினேன் தமிழே வணக்கம். அவை வணக்கம் கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை பொன்னகராம் புதுநகராம் வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம் மின்னரகராம் தொழில்கள் கலைகள்…

மும்பையில் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம்

  ஞாயிறு இராமசாமி அவர்களால் நடத்தப் பெறும் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம், மும்பை, செம்பூர் மகளிர் சங்க(மகிலா சமாசம்) அரங்கில் மாசி 17, 2046 – 01/03/15 அன்று மாலை 6.மணிக்கு நடைபெற்றது.   கவியரங்கத்திற்குக்  கவிஞர் ஆதிரா முல்லை தலைமை வகித்தார்.  இதில் மும்பைத் தமிழ்ச்சங்கத் தலைவர், செயலாளர்  முதலான 13 கவிஞர்கள் கவிதை படித்தனர்.   கவிஞர் பரணி அவர்களின் கவிதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன.  கவியரங்கின் முடிவில் ஞாயிறு இராமசாமி அவர்களால் தமிழிசைப் பாடல்களும்…

மும்பையில் கூடுவோம்! – உலகத் தமிழர் பேரமைப்பு

  மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய “உலகத் தமிழர் பேரமைப்பு ” சார்பாக மும்பை தாராவி இல் உள்ள காமராசர் ஆங்கிலப் பள்ளியில் வரும்  சூன் 15ஆம் நாள் மாலை 6 மணி முதல்  நூல் வெளியீட்டு விழாவும் ஆவணப்படம் திரையிடலும் நடக்க இருக்கிறது. இந் நிகழ்ச்சியில், பவா சமுத்துவன் எழுதிய  “மேதகு பிரபாகரன்- வாழ்வும் இயக்கமும்”  , தோழர் பொழிலன் எழுதிய “தமிழ்த்தேசம்” ஆகிய நூல்களின் வெளியிட்டு விழாவும்  ,செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் இயக்கிய “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது…