வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 30. முயற்சி யுடைமை உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி. உயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும். முயற்சி பலவகை யுயற்சி நல்கும். முயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது. முயற்சி யூழையு முதுகிடச் செய்யும். முயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும். முயற்சி யுடையார் மூவுல காள்வார். விடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள். முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர். முயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர்…