வாழ்த்திற்குரிய கலைஞரே! இனி என்ன செய்யப் போகிறீர்கள்?
கலைஞர், வரலாற்றில் அருவினை பல ஆற்றிய அருந்திறலாளர்! அவரது பகைவர்களும் அவரது உழைப்பை மதிக்கத் தவறுவதில்லை! நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்; மடல்களாகவும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியவை மிகுதி. மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்த படைப்பாளர்; ஏறத்தாழ 75 திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதி உள்ளார்; நேற்றுவரை திரை உலகில் நுழைந்தவர்கள் அவர் எழுதிய திரையாடலைப் பேசி நடித்துக் காட்டித்தான் வாய்ப்பு பெற்றனர் என்பது அழிக்க முடியாத வரலாறு; பன்னிரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை…