எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! – முருகவேல் சண்முகன்
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! தமிழரின் தாகம் தணிவதில்லை. அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சூழ்நிலைகளில் அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாகக் கடந்த புரட்டாசி 08, 2047 / 24.9.2016 அன்று நடைபெற்ற ‘எழுக தமிழ்’ப் பேரணி அமைந்திருந்தது. தற்காப்பு முறையில், உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் அறப் போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது இப்பேரணி. அதுவும், இப்பொழுதைய கால ஓட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான தொடக்கக் கட்டமைப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. தான் தொடங்கப்பட்ட…