தேவதானப்பட்டியில் நீதிமன்ற வில்லையைப் பிய்த்து விற்போர்…
தேவதானப்பட்டப் பகுதியில் நீதிமன்றக்கட்டண வில்லையை விற்பனை செய்யும் ஊழியர்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பபடும் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுப்பும் மனுக்கள் முதலானவற்றில் ஒட்டப்படும் நீதிமன்றக்கட்டண வில்லைகளை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள, ஊராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் போன்ற வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு மனுக்கள் செய்தால் 2 உரூபாய் மதிப்புள்ள நீதிமன்றக் கட்டண அஞ்சல்தலையும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுக்கொடுத்தால் 10 உரூபாய்க்கான நீதிமன்றக் கட்டண அஞ்சல் தலையும் ஒட்டப்படவேண்டும். …