காவிரித் தாய் காப்பு முற்றுகை, தஞ்சாவூர்
காவிரித் தாய் காப்பு முற்றுகை இடம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வல்லம் சாலை) காலம் : தி.பி.2048 பங்குனி-15, 28.03.2017 செவ்வாய் காலை 10 மணி முதல் தமிழ்நாடு அரசே செயல்படு; இந்திய அரசைச் செயல்பட வை! இந்திய அரசே! காவிரித்தீரப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை நீக்காதே! காவரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்திற்குக் காவிரி வழக்கை அனுப்பாதே! விளைநிலங்களில் எங்கேயும் எரிநெய்மம்(பெட்ரோலியம்), எரிவளி, நிலக்கரி எதுவும் எடுக்காதே! தமிழ்நாடு அரசே! மேற்கண்டகோரிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்து; அரசியல் அழுத்தம் கொடு! காவிரிச்சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவித்திடு! ஆறுகளைக்காலி செய்யும் மணல் விற்பனையை முற்றாக நிறுத்து! கட்டுமானப் பணிகளுக்கான மணல் எடுப்பது குறித்து, பரிந்துரை வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திடு! உச்சவரம்பின்றி அனைத்து உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்! தண்ணீரின்றிப் பயிர்அழிந்த நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ. 25,000 உதவித்தொகை வழங்கு! இதில் 5 காணிக்கு(ஏக்கருக்கு) மட்டும் என்ற வரம்பை நீக்கு! தண்ணீரின்றிப் பயிர் செய்யாமல் தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ.15,000 உதவித்தொகை வழங்கு! உழவுத்தொழிலாளர்குடும்பம் ஒன்றுக்கு ரூ.25,000 துயர் துடைப்பு நிதி வழங்கு! தண்ணீரின்றிப் பயிர் அழிந்ததைக் கண்டு பதைத்து நஞ்சருந்தியும், மாரடைப்பு ஏற்பட்டும் இறந்த உழவர் குடும்பத்திற்கு உரூ.15,00,000இழப்பீடு வழங்கு! காவிரித் தாய் காப்பு முற்றுகை மேற்கண்ட கோரிக்கைகளுக்காகக், கட்சி சார்பின்றிக் காவிரி உரிமை மீட்புக் குழு, 28.03.2017 முதல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறது. அனைவரும் வாருங்கள்! செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு இணையம்:www.kaveriurimai.com பேசி: 94432 74002, 76670 77075
ஈழ மாணவர் சுட்டுக்கொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை – மே 17
யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரை சிங்களப் பேரினவாதக் காவல்துறை சுட்டுக்கொலை செய்திருக்கிறது. ஈழ மாணவர் எழுச்சியே 2009 இனப்படுகொலைக்குப் பின்பான அரசியலில் முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள், மாவீரர் விளக்குகள் விடுதலைக் கனலாய் பல்கலைக்கழக வளாகத்தில் முளைத்திருந்தன. தொடர்ந்து சிங்களப் பேரினவாதத்தின் முயற்சிகளுக்கு எதிராய்ப் போராட்டங்களும், மோதல்களும், முழக்கங்களும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே பிறந்தன. இந்தப் பின்புலத்திலிருந்தே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யாழ் மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய கோரமான படுகொலையின் 29ஆவது நினைவு நாள் இன்று. இந்த நிலையில் இந்தப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பன்னாடுகளின் தோல்வியும், அமெரிக்கத் தீர்மானத்தின்…
ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது! தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், அமைதியாக மீன் பிடிக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை பிப்ரவரி 29, 2016…
காவிரி உரிமை மீட்புப் போராட்டம் – பனங்குடி
புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28, 2015 அன்பான தோழர்களுக்கு வணக்கம்! தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டுத், தமிழர்களின் தேசிய ஆறாக விளங்குவது காவிரி ஆறாகும். அதன் உரிமையை மீட்பதற்கான போராட்டத்தில், சென்னை முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், வீராணம் ஏரியில் நிரப்பப்படும் காவிரி நீரே, சென்னைக்கு மிகப்பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது என்பதை நாம் மறந்துவிடலாகாது! காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் புரட்டாசி 11, 2046…
செப்டெம்பர் 1 இல் சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! – வைகோ
அமெரிக்க அரசின் வஞ்சகத்தைக் கண்டித்து, செப்டெம்பர் 1 இல் சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை!- வைகோ ஈழத்தமிழ் இனம் இன்றைய உலகால் சபிக்கப்பட்ட இனம் போலும்; சில நாடுகளின் தொடர் இரண்டகங்களால் ஈழத்தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுத் துன்ப நரகத்தில் தள்ளப்படும் கொடுமை புதியபுதிய படிநிலைகளை அரங்கேற்றுகிறது. ஈழத்தமிழர்கள் தங்களுக்கெனத் தனி அரசு அமைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழந்தமிழர் பண்பாட்டைப் பாதுகாத்து மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியரும், ஒல்லாந்தரும், பின்னர் ஆங்கிலேயரும் அடுத்தடுத்துப் படை எடுத்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, இலங்கைத்…
மே 18 – முற்றுகைப் போராட்டம்
வைகாசி 04, 2046 / மே 18, 2015 சென்னை
இலங்கையைப் புறக்கணிப்போம்!- ஆளுநர் மாளிகை முற்றுகை
இலங்கையைப் புறக்கணிப்போம்! இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி! மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி – ஆளுநர் மாளிகை நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து… ஆளுநர் மாளிகை முற்றுகை… தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம். ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். அனைவரும் வருக!!