குமரிக் கண்டம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் – கே.கே.பிள்ளை
குமரிக் கண்டம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் வரலாற்றுக் காலத்திலேயே தென்னிந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால் தமிழகத்துத் துறைமுகப் பட்டினங்கள் பல நீரில் மூழ்கிவிட்டன. குமரிமுனைக்குத் தென்பாலும் நிலப்பகுதி இருந்ததாகவும் அதைக் கடல் கொண்டு போயிற்றென்றும் புவியியலார் கருதுகின்றனர். ஆனால், அந்நிலப்பகுதி எவ்வளவு தொலைவுக்குப் பரவியிருந்தது என அறுதியிட்டு அறிய முடியவில்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். கடல் கொண்டு போன அத்தென்னிலப் பகுதிக்குக் ‘குமரிக்கண்டம்’ என்றொரு பெயருண்டு. குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும்…