முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலம் பிறர் பிடியில்!

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர், வனவளத் திணைக்களம் , வனஉயிரிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ளன யாழ்ப்பாணம் – செப்.03, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் மாவட்ட நிருவாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினாலேயே எந்தவொரு வளர்ச்சிப்பணியினையும் முன்கொண்டு செல்ல முடியவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீகாந்தராயா தெரிவித்தார். “மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள்…

கேப்பாபுலவு போராட்டத்தினை அனைத்துநாட்டிற்கும் கொண்டு செல்லும் புலம்பெயர் இளையோர், மக்கள்

கேப்பாபுலவு போராட்டத்தினை அனைத்துநாட்டிற்கும் கொண்டு செல்லும் புலம்பெயர் இளையோர், மக்கள்   முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் நிலை கொண்டிருக்கும் படையினரை  அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக்கோரி கடந்த 20 நாட்களாகத் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். மக்களின் முறைமையான(நியாயமான) கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் நல்லாட்சி அரசாங்கம் எனத் தம்மைத்தாமே கூறும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. பல மிரட்டல்களுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை…

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்     இன்று கனடா நாட்டில் வசிக்கும் செயசுந்தர் கலைவாணி இணையரின் 10 ஆவது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார்.   பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிருவாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் போர் வடுக்களை…

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்குக் கற்றல் துணைக்கருவிகள்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு  உரூ. 20, 000 பெறுமதியான கற்றல் துணைக்கருவிகள்   திருநேல்வேலி சேர்ந்த வில்வராசன் சுதாகரனின் முதலாம் ஆண்டு  நினைவுநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கார்த்திகை 24, 2047 / 09.12.2016  அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு  உரூ. 20,000 பெறுமதியான கற்றல்  துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.   இல்லச் சிறார்களின் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றல் துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கிய வி.சுதாகரனின் குடும்பத்தினருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்ளும் தருணம் அமரர் சுதாகரனின் …

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!   இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 /  18-11-2016 வெள்ளி அன்று  வெகு சிறப்பாகநடத்தியது. கோவை :  கோவை மத்திய சிறைச்சாலை…

சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்!

சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்! போரின் நெருப்பில் சிரிப்பை இழந்த மழலை! தீருமா அவளின் வேதனை?  2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதக் காலப்பகுதியில் தமிழின அழிப்பின் மிக உச்சக்கட்ட நடவடிக்கைகள் புதுமாத்தளன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தன. அத்தருணத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர்.   அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மிகக் கொடூரமாக அங்கவீனமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு உடுப்புக்குள ஊரைச் சேர்ந்த இரத்தினராசா  சீவனா (அகவை 11) என்னும் சிறுமி, படுகொலை நடவடிக்கையில் சிக்கிப் போர்க்காயங்களுடன் ஊனமாக்கப்பட்டு மீண்டுள்ளார்.   2009 ஆம்…

முல்லைத்தீவில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு

முல்லைத்தீவில்  தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு [கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு]   முல்லைத்தீவு உடையார்கட்டு பெரும் கல்விக்கூடத்தின் (மகா வித்தியாலயத்தின்) தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆனி 02, 2047 / 16.06.2016 அன்று காலை திறந்து வைத்தார்.   இதன்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சிவமோகன், சாந்தி சிறிகந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்விக்கூடத் தலைவர் வி.சிறீகரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்படுவதையும் கலந்து கொண்டவர்களையும் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடுவதையும் படங்களில்…

வட்டுக்கோட்டை இளைஞர்கள் இல்ல மாணாக்கர்களுக்கு உதவி

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர், செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்லச் சிறார்களுக்கு உரூபா 65000 பெறுமதியான 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டன. அத்துடன் இல்லச் சிறார்களுக்கு சிறப்பு நண்பகல் உணவும் வழங்கபட்டது. [படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப்பார்க்கவும்!]

தமிழ்மொழி பேசும் உலக உறவுகளே! நீங்களே சொல்லுங்களேன்?

  தமிழ் இனத்தின் தாய் – ஓர் உகத்தின் தாய், ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்? அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்?   இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே எமது இனத்துக்கு இந்த இழுக்கு! வெட்கம்! கேடு! அவமானம்! பழிப்புரை(சாபம்) எல்லாம்! எல்லாமே! ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள்.  ஈழத்தாயவள், சிங்களக் கொலைவெறி வண்கணாரின்(பாசிட்டுகளின் கால்களில் விழ முன்னே, பதறி ஓடோடிச்சென்று கைத்தாங்கலாகத் தூக்கி தாங்கிப்பிடித்துத் தேற்றாமல், நிகழ்கால நீலன்…