முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய  வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…!  பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்  முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…!  கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற  வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ…!  ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும்  இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ…!  ஐயோ உலகே! ஐயகோ பேருலகே!  பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?  கையேந்தி வந்தாரைக் கரமேந்தி காத்த இனம்  கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.  எல்லாம் இழந்தோம்…