தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : நிகழ்வுகள் விவரம்
கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 தலைப்புகள் – பேச்சாளர்கள் விவரம் தொடக்கவிழா – ‘கணித்தமிழ் விருது’ வழங்கும் விழா விவரம் சென்னை, தமிழ்நாடு – கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் எழுத்துருவியல் கருத்தரங்கம் வருகின்ற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் சென்னை கோட்டூரில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளது. தமிழ் எழுத்துரு வடிவங்களின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் அறைகூவல்களை எதிர்கொள்ளவும், எழுத்துருவியல் துறையில் நவீனத் தொழில்நுட்பத்தின் தேவைகளை நிறைவேற்றிடவும், மேற்கத்தைய…
அறிஞர் ஆனந்தகிருட்டிணன் ஆண்டுநூறு கடந்து வாழிய வாழியவே!
முனைவர் மு.ஆனந்தகிருட்டிணன், பொறியாளர்கள், கணித்தமிழாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வகையினராலும் உலக அளவில் நன்கு அறியப்பெற்ற ஆன்றோர் ஆவார். கட்டடப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், தொலை உணரியல், தகவல் தொழில் நுட்பம், அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை பகுப்பாய்வு, மேம்பாட்டு குறிகாட்டிகள், தொழில்நுட்பப் பன்னாட்டு மாற்றங்கள், சிறு, குறு தொழிலகங்கள், கல்வியகங்களின் மேலாண்மை, சிறார் அறிவியல் கல்வி எனப் பல்வேறு துறைகளில் விரிந்து பரந்த அறிவு கொண்ட அறிஞர் முனைவர் மு. ஆனந்தகிருட்டிணன் 1952 ஆம் ஆண்டு, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகம்)…