அருளாழி நயந்தோய் நீஇ !

                    அருளாழி நயந்தோய் நீஇ ! அறவாழி பயந்தோய் நீஇ ! மருளாழி துறந்தோய் நீஇ ! மறையாழி புரந்தோய் நீஇ ! மாதவரில் மாதவன் நீஇ ! வானவருள் வானவன் நீஇ ! போதனரிற் போதனன் நீஇ ! புண்ணியருட் புண்ணியன் நீஇ !   வீரசோழியம், யாப்பருங்கலம் 11 உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: 188

ஆதி நீஇ ! அமலன் நீஇ !

                           ஆதி நீஇ ! அமலன் நீஇ !   ஆதி நீஇ ! அமலன் நீஇ ! அயனும் நீஇ ! அரியும் நீஇ ! சோதி நீஇ ! நாதன் நீஇ ! துறைவன் நீஇ ! இறைவன் நீஇ ! அருளும் நீஇ ! பொருளும் நீஇ ! அறிவன் நீஇ ! அநகன் நீஇ ! தெருளும் நீஇ ! திருவும் நீஇ ! செறிவும் நீஇ ! செம்மல் நீஇ !   வீரசோழியம்…

நன்மை நீஇ! தின்மை நீஇ!

நன்மை நீஇ!  தின்மை நீஇ!   நன்மை நீஇ;  தின்மை நீஇ; நனவு நீஇ; கனவு நீஇ; வன்மை நீஇ; மென்மை நீஇ; மதியு நீஇ; விதியு நீஇ; இம்மை நீஇ; மறுமை நீஇ; இரவு நீஇ; பகலு நீஇ; செம்மை நீஇ; கருமை நீஇ; சேர்வு நீஇ; சார்வு நீஇ; நீலகேசி உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: பக்கம் 187

திருவள்ளுவப் பெயர்க்காரணம்: மு.இராகவையங்கார்

திருவள்ளுவப் பெயர்க்காரணம்: திருவள்ளுவர் என்று இவர் பெயர். பிறந்த குலம்பற்றி இவர்க்கு வழங்குவதென்று கூறுவர். வள்ளுவர் என்ற குடியினர் தாழ்குலத்த¬வ¬ருள் ஒருவராய், விசேட காலங்களிலே அரசாணையை முரசறைந்து சாற்றுவோர் என்பது முன்னூல்களால் அறியப்படுகின்றது. சோதிட நூல்வல்ல நிமித்தகராகவும் பண்டைக்காலத்தே இவர் விளங்கினர் (சீவக.419). சங்கக் காலத்தே தமிழ் நாட்டவருள் சாதிபற்றிய இழிவும் அதன் மூலம் அருவருப்பும் இப்போதுள்ளனபோல இருந்தனவல்ல. தமிழ் வேந்தர்களும் தலைவர்களும் பாணர் முதலிய தாழ்குலத்தவர்களை அவரது கல்வியறிவு முதலியன பற்றி எவ்வளவு சிறப்பாகக் கௌரவித்து வந்தனரென்பதற்குச் சங்கச் செய்யுட்களே தக்க சான்றாக…