அப்படி.. அப்படி! – மு இராமச்சந்திரன்
அப்படி.. அப்படி! ஆசைகளோடு அலைந்தால் எப்படி? அடிக்கடி வீழ்ந்து கிடந்தால் எப்படி? வரப்புகளின்றி. பாய்ந்தால் எப்படி வசதிகளின்றி குடித்தனம் எப்படி? அசதிகளோடு கிடந்தால் எப்படி? ஆட்டம் விடாது நடந்தால் எப்படி? சுகம் சுகமென்று கிடந்தால் எப்படி? சுற்றுச் சூழலை மறந்தால் எப்படி? கூடிக் களிக்க மறந்தால் எப்படி? குடும்பம் இன்றிக் கிடந்தால் எப்படி? அன்பும் நேசமும் விதைப்பாய் அப்படி! வசதிகள் தேடி செய்வாய் அப்படி! கூத்தும் குடியும் விடுவாய் அப்படி குழந்தைத் தனங்களை விடுவாய் சொற்படி.. கன்றாய் தாயாய் மகிழ்வாய் நற்படி கற்றாரோடு படிப்பாய்…
தமிழவள்! – மு. இராமச்சந்திரன்
தமிழவள்! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர் குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை வஞ்சி வஞ்சி யெனவே அவளும் வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!.. செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய் செய்தனர் புலவர் கவியென வடிவாய் மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க… ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க உருண்டது காலம் பலர்வழி நடக்க… வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க வந்து விழுந்தது இசையென முழக்க.. அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய் பொன்னும் மணியும்…