‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்

‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில்  ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார்.  திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…

இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு, இலண்டன்

தமிழ் ஆய்வு மைய வெளியீடாக, ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களினுடைய ‘இலங்கை அரசியல் யாப்பு நூல்’ வெளியீடு.  ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட “இலங்கை அரசியல் யாப்பு [(இ)டொனமூர் முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931 – 2016]” என்ற நூலானது எதிர்வரும் ஆடி 22, 2047 – 06.07.16 சனிக்கிழமை இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையில் வவுனியாவில் சிந்தாமணி பிள்ளையார் மண்டபத்திலும், இலண்டனில்  (கீழ்உலர்நிலம் எனும்) ஈசுட்காம்  மும்மை  மையத்திலும்  / TRINITY…