தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு
செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் எசுஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 7-ஆம் ஆண்டு (2017-2018) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. சூன் 2017-இல் வகுப்புகள் தொடக்கம் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா முதலான வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு, நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும்….