சான்றோர் பெருந்தகை மு.வ. – 3/3 : – முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 
(சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – தொடர்ச்சி) 10. சான்றோர் பெருந்தகை மு.வ. 3/3 “பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவற்றுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை. பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது. பேச்சு வள்ர்கின்றது. பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.” “மக்களுக்குள் சாதி இரண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சாதி. எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதி, இந்தச் சாதிகளுக்குள் கலப்பு மணம் கூடாது.” “வேப்பமரம் அத்தி ஆவதில்லை. மூங்கில்…
சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 
(சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3 – தொடர்ச்சி) 10. சான்றோர் பெருந்தகை மு.வ. 2/3 நூற்பணி : புதினங்கள்எழுபது நூல்களுக்கு மேல் எழுதி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ள முனைவர் அவர்கள் முதன் முதலில் ‘பாவை’, ‘செந்தாமரை’ முதலிய நூல்களை 1943-44ஆம் ஆண்டுகளில் எழுதினார். இவர்களுடைய ‘கள்ளோ? காவியமோ?’ என்னும் புதினம் பலர் வாழ நல்வழி காட்டியது. ‘அல்லி’ ஆணுலகிற்கு எச்சரிக்கை தருவது. ‘அகல் விளக்கு’ எனும் புதினமும் இத்தகையதேயாகும். இந்நூல் 1962ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி (Sahitya…
சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3- முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 5/5 தொடர்ச்சி) 10. சான்றோர் பெருந்தகை மு.வ. 1/3 வடார்க்காடு மாவட்டத்திவ் வாலாசா என்னும் ஊர் உளது. அவ்வூரின் அருகில் அழகுற வேலமலை நிமிர்ந்து நிற்கின்றது. வேலமலையின் அடிவாரத்தே வேலம் என்னும் எழிற் சிற்றுார் அமைந்துள்ளது. அச்சிற்றுாரே சிற்றுாரும் பேரூரும் தமிழ்கூறும் நல்லுலகும் ‘முவ’ என்ற இரண்டு எழுத்துக்களால் ஒருமுகமாக மாண்புடன் போற்றும் முனைவர்மு. வரதராசனார் அவர்களின் சொந்த ஊராகும். பிறப்புசொந்த ஊர் வேலம் என்றாலும், முனைவர் அவர்கள் பிறந்தது வடார்க்காடு மாவட்டத் திருப்பத்துார் ஆகும். 1912ஆம் ஆண்டிலே பிறந்த முனைவர் அவர்களின்…
‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ.
‘திராவிடம்’ அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை – மு.வ. தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 25 நூற்றாண்டு் வரலாறு உடையது.# தென்னிந்தியாவின் மற்றத் திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8 – ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றியவை. ஆகையால், அதற்கு முந்திய 12 நூற்றாண்டுக் காலத் தமிழ் இலக்கியம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் குழந்தை போல் தனியே வளர்ந்து வந்தது. சங்கக் காலத்துக்கும் கி.பி. 7 – நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமற்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. சைன…
வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு, தமிழோடுதான் ஒத்துள்ளது! – மு.வ.
வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு, சமற்கிருதத்தோடு அல்லாமல் தமிழோடுதான் ஒத்துள்ளது! இந்திய நாடு முழுதும் மிகப் பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி என்று (Proto -Dravidian) என்று கூறுவர். வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் (Syntax) இன்று வரையில் ஒற்றுமை இருந்து வருவதற்குக் காரணம், மிகப் பழங்காலத்தில் இருந்து வந்த ஒருமைப்பாடே ஆகும். வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிட மொழி…
ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ
ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டு மிராண்டிகள் என்றும் தூற்றும் இயல்பினராக விளங்கினர். ஆரிய திராவிட நாகரிகம். இன்று ஆரியம் என்று போற்றப்படுபவை எல்லாம் உண்மையாகவே ஆரியர்க்கு உரியவை…
சங்க இலக்கியக் காட்சிகள் : தாய்மனம் – மு.வ.
சங்க இலக்கியக் காட்சிகள் தாய்மனம் – பேராசிரியர் முனைவர் மு.வரதராசனார் காக்கை உட்கார்ந்தது! அந்தப் பனை மரத்தில் ஒரு பனம்பழம் விழுந்தது, இந்தக்காட்சியைக் கண்டவன் ‘‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’’ என்றான்; அவன் சொன்னதைக் கேட்டவன், ‘‘அந்தக் காக்கை உட்கார்ந்ததே பனம்பழம் விழுந்ததற்குக் காரணம்’’ என்று தவறாக எண்ணவும் கூடும். இவ்வாறு எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் காரணகாரியமாக்கிக் தொடர்புபடுத்திக் கூறக்கூடாது என்பதே பெரியோர் கருத்து தருக்க நூலார் ]காகதாலிய நியாயம்’ என்ற பெயரால் இதனைத் தெரிவிப்பர். காக்கை அந்த மரத்தில் எத்தனையோ முறை…