பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 5 தொடர்ச்சி) களம் : 5 காட்சி : 1 நாற்சந்தியில் பொதுமக்கள் அறுசீர் விருத்தம் முதியோன் 1 : மண்ணாள் வேந்தன் குலக்கொடிக்கு மறவா வண்ணம் யாப்புரைக்க எண்ணி யழைத்தார் சூதாக இளமைப் பருவந் தோதாக பெண்ணாள் கவியின் தமிழாலே பிணையல் கொண்டாள் அன்பாலே நண்ணும் அவையில் இற்றைநாள் நல்ல முடிவைக் காண்குவமோ முதியோன் 2:…