மூத்த குடிமக்களுக்கான கட்டணமின்றிப் பயணச்சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது
முதலமைச்சர் செல்வி செயலலிதா அறிவித்துள்ள, சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் புதிய சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்துகளில் பயணம் செய்வதற்கான அடையாளச்சீட்டுகளை முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். அரசுப் பேருந்துகளில், 60 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வகை செய்யும் புதிய திட்டம் ஒன்றை, முதலமைச்சர் செல்வி செயலலிதா, கடந்த 18- ஆம் நாள் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதற்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இன்றுமுதல்…
கலைச்சொல் தெளிவோம்! 7. ] மூத்த குடிமக்களை மூதாளர் என்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மூதாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் மூதாய், மூதாளர், மூதாளரேம், மூதாளன், மூதிலாளர், மூதிலாளன், மூதிற்பெண்டிர், மூதின் மகளிர், முதலான சொற்கள் மூலம் புலவர்கள் மூத்தோரைக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள், மூதாளன், மூதாளர் என வரும் இடங்கள் வருமாறு : நரைமூ தாளர் நாயிடக் குழிந்த (மருதன் இளநாகனார் : புறநானூறு : 52.14) நரைமூ தாளர் கைபிணி விடுத்து (அகநானூறு :366.10) பெருமூ தாளர் ஏமஞ் சூழப் (முல்லைப்பாட்டு : 54) முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை (பதிற்றுப்பத்து: 76.24) இவற்றின் அடிப்படையில்,…