(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 1 தொடர்ச்சி) 2 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் மென்மை     தமிழர் மாந்தன் வரலாற்றிற் குழந்தைபோல் முந்தித் தோன்றிய இனத்தவராதலால், அவர் வாயில் குழந்தைகளும் முதியவரும் களைத்தவரும் நோயாளிகளும்கூட எளிதாய் ஒலிக்கத் தக்கனவும், பெரும்பாலும் எல்லா மொழிகட்கும் பொதுவானவுமான (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக) முப்பது எழுத்தொலிகளே பிறந்திருந்தன.  அதோடு, தனி மெய்யொலியில் தொடங்கும் சொற்களும், வல்லின மெய்யொலியில் இறுஞ் சொற்களும், சில மெய்யொலிகட்குப் பின் சில மெய்யொலிகள் தமித்தோ உயிர்மெய்யாகவோ  இடையில் வருஞ் சொற்களும், அவர் வாயில் வந்ததில்லை….