வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம்  மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 4.மெய்யைத் தொழுதல் மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள் உலகத்தை எல்லாம் உருவாக்கக் கூடிய முதன்மையான கடவுள் உண்மையே ஆகும். உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது. உலகத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் உயிராக நிற்பது உண்மையே ஆகும். அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது. உண்மை, உலகம் எல்லாம் ஞானமாக நிறைந்து விளங்குகிறது. பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது. உண்மை, மனிதர்களின் செயல்களின் விளைவை அவர்களுக்கு அளிக்கிறது. உலகந்…