அன்பின் ஐந்திணையில் தலைமக்களைப் பற்றி பேசவரும் போதெல்லாம் ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் என்று குறிப்பிடும் பாங்கினைக் காணலாம். தொல்காப்பியர் ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என வரும் நூற்பாவில் ஒத்த கிழவனும் கிழத்தியும் குறித்து விளக்கியுள்ளார். ஆனால் அங்குச் சுட்டப்படும் ஒத்த என்பதற்குரிய விளக்கத்தினை அவர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகிறார். பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு உருவு நிறுத்த காமாவயில்                                                                             நிறையே யருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே   (தொல்.பொருள்.மெய்ப்.269) என்ற நூற்பாவின் மூலம் தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும்…