திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 036. மெய் உணர்தல்
(அதிகாரம் 035. துறவு தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 036. மெய் உணர்தல் எப்பொருள் ஆயினும், அப்பொருளின் உண்மையை ஆராய்ந்தும் அறிதல். பொருள்அல்ல வற்றைப், பொருள்என்(று) உணரும், மருளான்ஆம், மாணாப் பிறப்பு. பொய்ப்பொருள்களை, மெய்ப்பொருள்கள் என்று உணர்தல், சிறப்[பு]இல்லாப் பிறப்பு. இருள்நீங்கி, இன்பம் பயக்கும், மருள்நீங்கி, மா(சு)அறு காட்சி யவர்க்கு. மயக்கத்தை நீக்கிய ஞானியார்க்கே, தூயநல் பேர்இன்பம் தோன்றும். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, வையத்தின் வானம், நணிய(து) உடைத்து….