தாய்போல யாருமுண்டோ? – செயராமர், மெல்பேண்
தலைவருடி எனையணைத்து தனதுதிரம் தனைப்பாலாய் மனமுருகித் தந்தவளே மாநிலத்தில் தாய்தானே மடிமீது எனைவைத்து மாரியென முத்தமிட்டு விழிமூடித் தூங்காமல் விழித்தவளும் தாய்தானே படிமீது கிடந்தழுது பலமுறையும் வேண்டிநின்று பாருலகில் எனைப்பெற்ற பண்புடையோள் தாய்தானே விரதமெலாம் பூண்டொழுகி விதியினையே விரட்டிவிட்டு வித்தகனாய் இவ்வுலகில் விதைத்தவளும் தாய்தானே மலடியென மற்றவர்கள் மனமுடையப் பேசிடினும் மால்மருகன் தனைவேண்டி மாற்றியதும் தாய்தானே நிலவுலகில் பலபிறவி வந்துற்ற போதினிலும் நிம்மதியைத் தருவதற்கு நிற்பவளே தாய்தானே தாய்மைக்கு இலக்கணமே தாய்மைதான் ஆகிவிடும் தாய்போல இவ்வுலகில் தகவுடையார் யாருமுண்டோ வேருக்கு நீராகத் தாயிருப்பாள் எப்போதும்…
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன் இல்லையென்று சொல்லுவதில்லை கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன் காட்சிதர மறுப்பதுமில்லை ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன் அரவணைக்கக் கரத்தைநீட்டுவான் நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன் நாளுமெங்கள் அருகில்வந்திடுவான் உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன் உள்ளமதில் வந்துநின்றிடுவான் தெளிவுடனே நாளும்தேடுங்கள் –…