மே 17 நினைவேந்தல், சென்னை
தமிழீழத்தில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் அவர்கள் தங்களின் நியாயமான உரிமையான தம் தாயக விடுதலையைக் கோரியது ஒன்றே. சிங்களப் பேரினவாத இலங்கையோடு சேர்ந்துகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் இந்தியாவும் மேற்கத்திய நாடுகளுமே என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமது வணிக நலன்களுக்காகவும் மண்டல மேலாதிக்கத்திற்காகவும் நமது இனத்தைக் கொத்து கொத்தாகக் கொன்று குவித்துள்ளனர். இவர்கள் தான் தற்போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் போராட்டங்களின் நெருக்குதலால்…