மேதகு தமிழிசைக்குப் பாராட்டும் வாழ்த்தும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மேதகு மரு.தமிழிசை செளந்தரராசனுக்குப் பாராட்டும் வாழ்த்தும் வேண்டுகோளும்! தம் திறமையாலும் உழைப்பாலும் பல படிநிலைகளில் முன்னேறி ஆளுநர் நிலைக்கு வந்துள்ளமைக்குத் தமிழிசைக்கு நம் பாராட்டுகள்! மேலும் பல சிறப்புகள் எய்தி முன்னேற வாழ்த்துகள்! கட்சிச் சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பாரின் வாழ்த்துகளைப் பெற்ற ஒரே தலைவராக இவர்தான் இருப்பார் என்பதில் ஐயமில்லை. பா.ச.க.வை வேண்டாதாரும் இவர் ஆளுநர் பதவியில் அமர்ந்ததற்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர். தான் மக்கள் மன்றத்திற்குச் செலல வேண்டும் என நீண்ட காலமாக விரும்புவதாகவும் அந்த வாய்ப்பைத் தருமாறும் அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில்…