திருக்குறளின் அறத்துப்பாலுக்குக் கதையெழுதிய மாணவர்கள்!
திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பதின் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார். இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்றுபள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழாநடைபெற்றது. ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி சிரீதேவி வெளியிட, கவிஞர்…