குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்

குறுமை என்ற பண்பின் பெயர் அப்பண்பினையுடைய பாவிற்குப் பெயராகி, மை விகுதி குன்றி, அள்சாரியை பெற்று, குறு + அள் = குறள் என்றானது. ஒரு தடியில் துண்டித்ததடி குறுந்தடி. ஒரு அரிசியில் துண்டித்த பகுதி குறுநொய் (குறுணை) என்றாங்கு முதற்பாவான ஒரு வெண்பாவின் நான் கடியிற்றுண்டித்த ஒன்றே முக்காலடி, குறள் எனப் பண்பாகு பெயர் பெற்றது. இக்குறட்பாக்களாலாகிய நூலுக்கும் குறள் என்றது கருவியாகு பெயராய் வந்தது. இங்ஙனம் இருமுறை ஆகுபெயர் மடங்கி வரலால் இருமடியாகு பெயரென்றுங் கூறலாம். மேலும் சிறப்புக்குறித்த திரு என்ற…

‘‘பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்

    ‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால் இந்தியைத் தேசிய மொழியாக்குவதில் நியாயமிருக்கிறது’’ -‘‘மொரார்சி’’ 28-3-64, காஞ்சிபுரம். இந்தி, தனிமொழியா? பழமை மொழியா? சொல்வளம், பொருள் வளமுண்டா? எழுத்து வனப்புண்டா? இலக்கிய விலக்கணங்களுண்டா? அறிவியல் நூல்களுண்டா? இந்தி படித்து ஒரு விஞ்ஞானியாகலாமா? ஒரு மருத்துவனாகலாமா? ஒரு பொறியியலனாகலாமா? ஒரு வழக்கறிஞனாகத்தானாக முடியுமா? அல்லது இந்தியைக் கொண்டு பிறநாட்டானோடு கலந்து பேசவியலுமா? என்ற கேள்விகட்கெல்லாம் விடைகள் இல்லையென்பது ஒப்பமுடிந்ததாய்விட்டது. இறுதிக்காரணம்? பெரும்பான்மையினர் பேசப்படுவதென்பதைத் திட்டமிட்டுத் ‘‘திடீர்ப்புளுகு’’கள் மூலம் உயர்த்திக்கொண்டே வருகிறார்கள். பொய்மையெனத் தயங்காது அதனையே மேன்மேலும் உறுதியுடன் பேசிவந்தால்…

கருத்து அரங்கம் இந்தியால் தமிழுக்குக் கேடு… – மே.சி.சிதம்பரனார்

கருத்து அரங்கம் இந்தியால் தமிழுக்குக் கேடு விடைகள் வினா 6 : மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் சிஞ்சித்தும் சிதைவுறாது என்று பசுமரத்தாணிபோல் என் மனத்தில் பதிகிறது. இதில் உங்கள் மனச்சாட்சி என்ன? விடைகள்: நம்நாட்டிற்கு அண்டை நாடுகள் பண்டைக்காலம் தொட்டு வாணிபம் போக்குவரவு முதலியவை நீடிப்பினும், அந்நாட்டு மொழிகள் நட்பு மொழிகளானாதால் மொழி வளர்ச்சியே யன்றிக் கேடில்லை. ஆட்சி மொழிகளாக வந்தவைதான் மொழியைச் சிதைத்தனவென்பது மேலே கூறினோம். இந்தி ஆட்சிமொழியாக வந்தும் வராததின் முன்பே பல தமிழ்ச் சொற்களழிந்தமையையும் எடுத்துக் காட்டினோம். இந்தி…

கருத்து அரங்கம் 7 இந்தியால் தமிழுக்குக் கேடு! – மே.சி.சிதம்பரனார்

  வினா1 : இந்தியால் தமிழ் எந்த வகையில் அழிகிறது? அழிந்தது? அழியும்? மேல் நாட்டில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ‘‘பின்னமாலியட்’’ என்பாரிடம் எதிர்கால விளைவுகளின் ஐயப்பாடுகள் பற்றி மக்கள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வதுண்டாம். அவற்றுள், ஒரு நாட்டிற்கு வரும் மீளாத பேராபத்து எது? “எவ்வித ஆபத்திற்கும் மீட்சியுண்டு. அந்நாட்டுத் தாய்மொழி மெல்ல மெல்ல மங்கி மறைவதுதான் மீளாத பேராபத்து.” ஒரு நாட்டை என்றும் அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமானால் செய்வதென்ன? “முதற்கண் அந்நாட்டின் மொழி வளத்தைக் கெடுக்க வேண்டும்” இங்ஙனம் கூறிய விடைகள்…