மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

: மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித்…

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை  கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்!  இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக வாழ்வாதார அழிப்பு – கருத்தரங்கம்

இந்திய எரிவளி ஆணையக் (GAIL) குழாய்கள் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்   மாசி 08, 2047 – 20-2-2016 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை இதழாளர் மன்றத்தில் இந்திய எரிவளி ஆணையக் (ழுஹஐடு) குழாய்ப் பதிப்பின் கண்டத்தை(ஆபத்தை) விளக்கும் இதழாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்சார்பு உழவர்கள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார்கள் தோழர் பிரவின், தோழர் திருமுருகன், இந்திய எரிவளி ஆணையக் (GAIL)…

அணுஆற்றல் எதிர்ப்புப் போராட்ட ஆதரவுக்கூட்டம்

தை 10, 2047  / சனவரி 24, 2016 சென்னை   மே 17 இயக்கம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் பூவுலகின் நண்பர்கள் சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்

தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும் – கருத்தரங்கம்

தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும் – தந்தை பெரியார் திராவிடர் கழகக் கருத்தரங்கம் புரட்டாசி 30, 2046 / அக்.17, 2015  மாலை 4.00  சூலூர்     அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும் அதற்கு இலங்கை மீது பன்னாட்டு உசாவல் நடத்துவது ஒன்றே தீர்வு என்றும் கருத்துரைத்து, தமிழர் தரப்பு நியாயத்தை உலக நாடுகளுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக எடுத்துரைத்து வந்திருக்கின்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி கலந்து கொள்ளும் கருத்தரங்கத்தை வரும்…

மே 17 நினைவேந்தல், சென்னை

    தமிழீழத்தில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் அவர்கள் தங்களின் நியாயமான உரிமையான தம் தாயக விடுதலையைக் கோரியது ஒன்றே. சிங்களப் பேரினவாத இலங்கையோடு சேர்ந்துகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் இந்தியாவும்  மேற்கத்திய நாடுகளுமே என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமது வணிக நலன்களுக்காகவும்  மண்டல மேலாதிக்கத்திற்காகவும் நமது இனத்தைக் கொத்து கொத்தாகக் கொன்று குவித்துள்ளனர். இவர்கள் தான் தற்போது பாதிக்கப்பட்ட தமிழர்களின் போராட்டங்களின் நெருக்குதலால்…

ஈழமும் பன்னாட்டுச் சதிகளும் – ஈரோட்டிலும் கோபியிலும் கருத்தரங்கம்

கோபியில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் காலை10 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். ஈரோட்டில்  சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் மாலை 5 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். மே17 இயக்கம் தவறாமல் வருக!

மே 18 – கறுப்பு நாள் : கவிஞானி அ.மறைமலையான்

பண்டைத்தமிழ் மக்கள் மறு பதிப்பெனவே மலர்ந்தோரே! என்றும்தமிழ் மறம் ஓங்கும் என்றே களம் கண்டோரே! விழுந்த தமிழ் இனம் எழவே வீரத்தீ விதைத்தோரே! இழிந்தஈனச் சிங்களரின் எதிர்ப்பையெலாம் மிதித்தோரே! தனிநாடாம் தமிழ்ஈழம் தனைநிறுவி வாழ்ந்தோரே! புத்தமும் காந்தியமும் கைகோத்ததால் வீழ்ந்தோரே! புலித்தலைவர் ஆட்சிகண்ட பொறாமைநரி இராசபக்சே கொலைபுரிந்தான் தமிழ்இனத்தைக் கொடிய நச்சுப்பாம்பெனவே! இந்தியாஆள் காங்கிரசார் ஈன்றகருவி உதவிகொண்டே தந்திரமாய் இராசபக்சே தமிழ்இனத்தைக் கொன்றானே! இரண்டாயிரத் தொன்பதாண்டு மே-பதினெட் டாம்நாளே இருண்டதுவே தமிழ்ஈழம் இருநூறாயிரவர் இறப்பாலே! பதினெட்டு மேத்திங்கள் கதியற்றார் நினைவுநாளன்று சதிசெய்த காடையரின் விதிமுடிக்கும்…

‘மே’ பதினேழு – இருள் கவிந்தநாள்… : – அறிவரசன்

                                                     ‘மே’ பதினேழு வன்னி நிலத்தின் முள்ளி வாய்க்காலில் இன எழுச்சிக்குப் பின்னடைவு ஏற்பட்ட நாள்… தமிழ் இன வரலாற்றில் இருள் கவிந்தநாள்… தமிழ்ப் பொதுமக்களும் போராளிகளும் புத்தன்பேர் சொல்பவர்களால் புதை குழிகளில் தள்ளப்பட்டநாள்… விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறங்கொன்றவர்களால் அறிவிக்கப்பட்ட நாள்… ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டதாகச் சிங்களக் காடையர் நம்பத் தொடங்கிய நாள்… வன்னித் தமிழர்களுக்குப் பின்னடைவு நேர்ந்ததால் உண்மைத் தமிழர்கள் பித்துப் பிடித்து நின்றநாள்… கொழும்பும் தில்லியும் நினைத்ததை முடித்ததாகக் கை குலுக்கிக் கொண்டநாள்… நமக்கு எதிரானவர்கள் சிங்களர் மட்டுமல்லர்;…

வன்னி மண் தின்ற பேய்கள்.. – செந்தமிழினி பிரபாகரன்

ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்.. எம் இனம் அழிந்த சோகம் கொடும் துயரம்.. நினைந்து நினைந்து நாளுமிங்கு நாம் அழுகின்றோம்.. சிதைந்து சிதைந்து எம் இனமும் இன்னும் அழிகிறதே.. வன்னி மண் தின்ற பேய்கள்.. முப்பொழுதும் ஆட்டமிட கண்ணீரில் எம் மண்ணோ நித்தமும் குளிக்கிறதே.. ஆற்றுவார் யாருமில்லை.. யார் காப்பார் தெரியவில்லை.. நாடாண்ட இனம் இன்று நடைப்பிணமாய் வீதியிலே.. -தரவு :முகநூல்