கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்!
கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்! வீழ்ந்தவர்கள் தாழலாமா? காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே! பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் பார்த்து உள் வேர்க்கும் (குறுள் 487) மன உரமாவது வேண்டுமல்லவா? “வீழ்ச்சியுறு ஈழத்தில் எழுச்சி வேண்டும்!” எனில் “சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித்…
பிரான்சில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள் (மே18)
தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள் : மே பதினேழு இயக்கம்
கனடா : தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்: ம.நடராசன் பங்கேற்பு
யேர்மனியில் : தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி
மே 18 – கறுப்பு நாள் : கவிஞானி அ.மறைமலையான்
பண்டைத்தமிழ் மக்கள் மறு பதிப்பெனவே மலர்ந்தோரே! என்றும்தமிழ் மறம் ஓங்கும் என்றே களம் கண்டோரே! விழுந்த தமிழ் இனம் எழவே வீரத்தீ விதைத்தோரே! இழிந்தஈனச் சிங்களரின் எதிர்ப்பையெலாம் மிதித்தோரே! தனிநாடாம் தமிழ்ஈழம் தனைநிறுவி வாழ்ந்தோரே! புத்தமும் காந்தியமும் கைகோத்ததால் வீழ்ந்தோரே! புலித்தலைவர் ஆட்சிகண்ட பொறாமைநரி இராசபக்சே கொலைபுரிந்தான் தமிழ்இனத்தைக் கொடிய நச்சுப்பாம்பெனவே! இந்தியாஆள் காங்கிரசார் ஈன்றகருவி உதவிகொண்டே தந்திரமாய் இராசபக்சே தமிழ்இனத்தைக் கொன்றானே! இரண்டாயிரத் தொன்பதாண்டு மே-பதினெட் டாம்நாளே இருண்டதுவே தமிழ்ஈழம் இருநூறாயிரவர் இறப்பாலே! பதினெட்டு மேத்திங்கள் கதியற்றார் நினைவுநாளன்று சதிசெய்த காடையரின் விதிமுடிக்கும்…
பேரினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
இறுதிக்கடன் என்பதன் மூலம் நாம் இறந்தவர்க்கு நம் மதிப்பையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம். இறந்தவர் நினைவைப் போற்றுவதற்கு நாம் நினைவேந்தல் என்கிறோம். இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ எதிர்பாரா நேர்ச்சி போன்றவற்றாலோ இறக்கும் பொழுது இவ்வாறு நினைவேந்தலாக நிகழ்த்துவது சரியே! போராளியாக வீர மரணம் அடையும் பொழுது நினைவேந்தலை வீர வணக்கம் செலுத்தும் வகையில் கடைப்பிடித்தலே இறந்தவர்க்கு நாம் அளிக்கும் மதிப்பாகும்! கொலை செய்யப்பட்டு இறக்கும் பொழுது, நினைவேந்தல் நடத்தினாலும் – ‘பல்லுக்குப் பல்’ என்பதுபோல் பழிவாங்குவது தவறு என்றாலும் – பழிவாங்கும் எண்ணமே…