பெறுமதியான பங்காளியா இலங்கை? – புகழேந்தி தங்கராசு
பெறுமதியான பங்காளியா இலங்கை? வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று – ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் -என்று இப்போது அவர் சோதிடம் சொல்வது, தமிழர்களையும் பன்னாட்டு சமூகத்தையும் எப்படியாவது ஏமாற்றியாக வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவு. இப்போது…
இலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார்
பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவு இலட்சுமி அம்மா எழுதிய ‘இலட்சுமி என்னும் பயணி’ என்ற தன்வரலாற்று நூல் ‘மைத்திரி புத்தகங்கள்’ என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க. -மார். (சிபிஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து…