இந்தியாவின் மொழிச்சிக்கல்
– கூடலரசன் இந்தியத் துணைக்கண்டத்தில் நிலையான விவாதத்துக்குரிய சிறந்த பொருளாக மொழிச்சிக்கல் அமைந்துள்ளது அரசியல் வடிவம் பெற்றுள்ள மொழிஆதிக்கம் பெருநிலப் பரப்பின் கருப்பொருளாக அனைவரின் சிந்தனையையும் கவர்ந்துள்ளது. ஆட்சிப்பீடத்து ஆதிக்க மொழியாக நான்கு நூற்றாண்டுகள் இடம் பெற்றிருந்த ஆங்கிலம் அகற்றப்படுவதும், அந்தச் சிறப்பான உரிமையை இந்தி மொழிக்கு வழங்குவதும் இமயம் முதல் குமரிமுனை இறுதியாக கடுமையான கண்டனத்துக்குரியதாக அமைந்துள்ளது. இந்திக்கு மகுடம் சூட்டினாலும் ஆங்கிலத்தின் தேவையைப் புறக்கணிப்பது இயலாத செயலாக இருக்கிறது. ‘அறிவுப் பெருக்கத்திற்கு ஆங்கிலம் தேவையாகும். அனைத்திந்தியத் தொடர்பு மொழியாக ஆங்கிலமே…