மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! – சு.குமணராசன், மும்பை
மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! உலகின் மிகப் பழமையான மொழிகள் என வரலாற்றாய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமசுகிருதம், ஈபுரு ஆகிய மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சமசுகிருதம் போன்றவை குறுகியும் அழிவு நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. எஞ்சியிருக்கின்ற சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஒப்பாய்வு செய்யும் போது செவ்வியல் தன்மையும் சீர்மையும் தனித்தியங்கும் தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் அறநெறிக் கொள்கைகளின் கருவூலமாகவும் விளங்குவது தமிழ் மொழி ஒன்றே ஆகும். சற்றொப்ப முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு…
மொழித் தூய்மை உலகோர் வேண்டுவது
“தூய தமிழ் என்றால் இன்று எள்ளுவோர்களும் உளர். ஆங்கிலத்தைப் பார்” என்று அதன் கலப்புத் தன்மையைச் சுட்டிக் காட்டுவர். ஆங்கில மொழியின் வரலாற்றை அவர் அறியார். அங்கும் தூய ஆங்கிலம் வேண்டும் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. தூய ஆங்கில இயக்கம் (Society for Pure English) என்றே பெயரிட்டனர். அது 1913இல் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியவர்கள் அந்நாட்டுப் பெரும் புலவர்கள். அதைத் தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அந்நாட்டு அரசவைப் புலவர். அதற்கு முன்பு அந்நாட்டில் வேற்றுமொழிச்சொற்களை ஆங்கில மொழியில் கலப்பதை வெறுக்கும் கொள்கை…