“மொழிப்போர் – 50 மாநாடு” – தமிழ்த் தேசியப் பேரியக்கம்!
“மொழிப்போர் – 50 மாநாடு” மதுரையில் நடத்துகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கம்! பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்! தஞ்சை மாவட்டம் – பூதலூர் வட்டம், ஆச்சாம்பட்டியில், தனியாருக்குச் சொந்தமான இயற்கை வேளாண் தோட்டமான ”செம்மை வனத்தில்”, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஐப்பசி 05, 2046 / அக். 22, 2015 காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில், பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து கலந்து கொண்டனர். சென்னையிலிருந்து, க. அருணபாரதி, பழ.நல். ஆறுமுகம், மதுரையைச் சேர்ந்த அ.ஆனந்தன், இரெ. இராசு, தஞ்சை…