இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
தடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை. ஆனால்,…
மொழிப்போர் 50 மாநாடு, மதுரை
தை 10, 2047 / சனவரி 24, 2016 நேரலை – காலை 9.30 முதல் இரவு 8.30 வரை கீழுள்ள தளங்களிலும் நேரலையைக் காணலாம்.. https://www.youtube.com/embed/lUREnLmb-ME http://www.kannotam.com/ மொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு! பேரன்புடையீர்! வணக்கம். தமிழ் வளர்த்த மதுரையில் தை 10, 2047 / 2016 சனவரி 24-இல் நடைபெறும் மொழிப்போர் – 50 மாநாட்டிற்கு உங்களை அழைக்கவே இம்மடல்! பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான…