தொல்காப்பிய விளக்கம் 13 – பேராசிரியர் சி. இலக்குவனார்
(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) 67. குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் குற்றியலுகரம் = குறைந்த ஓசையை, உடையது எனப்படும் ‘உ’, முறைப்பெயர் மருங்கின் = (நுந்தை என்னும்) முறைப்பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை = ஒற்றாய் நின்ற நகரத்தின் மேல், நகரமொடு முதலும் = நகரமெய்யோடு மொழிக்கு முதலாகி வரும். உகரம் ஓசையில் குறைந்து வருவது, நுந்தை என்னும் சொல்லில் மொழிமுதலில் உண்டு என்று அறியற்பாலது. ‘நுந்தை’ என்பதனையும், ‘நுமக்கு’ என்பதனையும்…