(தோழர் தியாகு எழுதுகிறார் 199 : அணையாத் தீ – தொடர்ச்சி) மோதி வாயில் கொழுக்கட்டை! மணிப்பூர் எரிகிறது! மக்கள் கொலையுண்டு மடிகின்றார்கள்! மத வழிபாட்டுக் கூடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்டுகின்றன. கொடிய கொலைக் கருவிகளோடு வன்முறைக் கும்பல்கள் அலைந்து திரிகின்றன! மாநில முதல்வரே ஒருதரப்பு மக்கள் மீது வெறுப்புமிழ்ந்து வன்முறையைத் தூண்டி விடுகின்றார்! இந்திய உள்துறை அமைச்சரோ மணிப்பூர்த் தீயில் குளிர்காய்ந்து அரசியல் பழி விளையாட்டில் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்! இத்தனையும் நடக்கும் போது இந்தியப் பெருநாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோதி இது குறித்து…